(த.லோகதக்சன்)
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புல்மோட்டையில் அமைந்துள்ள நாகலென் ரஜமகா விகாரையில் நாட்டின் ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி திங்கட்கிழமை இரவு அரிசிமலை விகாராதிபதி பணாமுரே திலகவன்ச தேரர் தலைமையில் விஷேட போதிபூசை வழிபாட்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே, குச்சவெளி பிரதேச செயலாளர் மா.தயாபரன், கலாசார உத்தியோகத்தர் ஆர்.எம்.எஸ்.பியசேகர, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், புல்மோட்டை கிராம உத்தியோத்தர்களான எஸ்.ரினோஸ், எஸ்.எம்.தாஜுதீன், எஸ்.ஹசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment