0




ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அவர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



அஸ்வரின் வெற்றிடத்துக்கு அமீர் அலி நியமனம்







தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம் அஸ்வரின் வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி நிமியக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







அமீர் அலியின் வெற்றிடத்துக்கு அலி சாஹிர்?



கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி, தேசிய பட்டியல் எம்.பி பதவியை ஏற்றுக்கொண்டால், மாகாண சபையில் ஏற்படுகின்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு அலி சாஹிர் மௌலான நிமியக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட அலிசாஹிர் மௌலான, விருப்பு வாக்குகளில் ஐந்தாவது இடத்தை பெற்று தோல்வியடைந்தார்.

தற்போது அவர், ஏறாவூர் நகர சபைத்தலைவராக இருக்கின்றார்.  எனினும், தேசியப்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதா? இல்லையா? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்னும் தீர்மானிக்கவில்லை( நேற்று இரவு வரையிலும்) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம், கொழும்பில் திங்கட்கிழமை  (24)  இரவு நடைபெற்றபோது கிழக்கு மாகாணசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள்,  தனிக்குழுவாக இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக் ஆகியோர் தனித்து இயங்க தீர்மானித்தனர்.

அந்த காய்நகர்த்தலில் பெறுபேறாகவே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், தனது பதவியை நேற்று இராஜினாமா செய்தார்.

இந்நிலையிலேயே வெற்றிடமாக இருக்கின்ற  தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அமீர் அலி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top