0
கல்முனை இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் கழிவு நீர் குழியொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
யாகத்தலி முகம்மது நுபையில் (வயது 13) என்ற சிறுவனே மேற்படி சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

கல்முனை மாநகர சபையினால் கழிவு நீர் சேகரிப்பதற்காக வெட்டப்பட்ட சுமார் 6 அடி ஆழமான குழியில் தற்போது பெய்து வரும் மழை நீர் நிரம்பி இருந்த வேளையில் இச்சிறுவன் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து சிறுவன் காணாமல் போயுள்ளதாகவும் இதன் பின்னர் பெற்றோரினால் தேடப்பட்ட போது இரவு 9 மணியளவில் கழிவு நீர்க் குழியிலிருந்து சடலமாக சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top