பதுளை கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்துமுல்ல மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தின் பொது உயிர்நீத்த 34 பேரின் ஆத்மா சாந்தி வேண்டி உரிய இடத்தில் இன்று சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
இவ்வாறு எம்மை விட்டுப்பிரிந்த எம் உறவுகள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் முப்பது நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று (27) வியாழக்கிழமை அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களின் ஆத்மா சாந்திக்காக சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இயற்கையின் இக்கொடுர தாண்டவத்தில் லயன்களில் வாழ்ந்த 150 மேற்பட்ட வீடுகள் மற்றும் ஆலயம் ஒன்றும் புதையுண்டமையானது மனித நேயம் கொண்ட அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியிருந்தமை யாவரும் அறிந்த உண்மையே.
உடைமைகளையும் உறவுகளையும் இழந்த மக்கள் பல்வேறுபட்ட துயரில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்ப இறைவன் துணை நிற்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டியும் எமது இணையத்தள குழுமத்தினரும் இத்தருணத்தில் இறைவனை பிராத்திக்கின்றோம்.

Post a Comment