0

(சிமஸ்னு)

மண்முனை  தென்மேற்கு கொக்கடிச்சோலைப் பிரதேச சபைக்குற்பட்ட முதலைக்குடா கணணி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  (17.11.2014) இன்று மண்முனை  தென்மேற்கு கொக்கடிச்சோலை பிரதேச சபையின் செயலாளர் ந.கிருஸ்னபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

 இன் நிகழ்வில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் திருமதி.கா.ஜெ.அருள்பிரகாசம் மற்றும் வேள்ட் விசன் நிறுவனத்தின் கிழக்கு வலய முகாமையாளர் அலெக்ஸ் வென்சமின் நாவிதன்வெளி பிரதேச திட்ட முகாமையாளர் பிரேமச்சந்திரன், ஏறாவூர் பற்று திட்ட முகாமையாளர் சுரேஸ் ஞானப்பிரகாசம், பட்டிப்பளைப் பிரதேச திட்ட முகாமையாளர் அனுராஜ் டேராகெற் நிறுவன பணிப்பாளர் அமல்ராஜ், விரிவுரையாளர் சப்ணி உனைஸ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கலென பலரும் கலந்து கொண்டனர். 

கடந்த வருடம் வேள்ட் விசன் நிறுவனத்தினரால் 05 கணணிகள் வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பயிற்சி நெறியானது முற்றுமுழுதாக வெற்றியளித்துள்ளதாகவும், இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது கணணி தொடர்பாக பயிற்றுவிப்பாளர்களாக செயற்படக்கூடிய திறமையூடையவர்களாகவும் உள்ளனர் என மண்முனை  தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ந.கிருஸ்னபிள்ளை தனது உரையில் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் வேள்ட்விசன் நிறுவனத்தினால் மேலும் 05 கணணிகள் இப் பயிற்சி நிலையத்திற்கு வழங்கப்பட்டதுடன், ஆரையம்பதி பிரதேசசபை, தென்மேற்கு பிரதேசசபை, வேள்டவிசன் நிறுவனம், டேராகெற் நிறுவனம் என்பன இனைந்து 05 கணணிகளுடன் 15 மாணவர்களுடனும் அறுகுப்பிடிபேல் ஆரம்பம்பிக்கப்பட்ட இந் நிலையம்  தற்பொழுது 260 மாணவர்களுடன் ஆலை மரம்போல் வளர்ந்துள்ளதுள்ளமை  கூட்டுமுயற்றியின் பலன் என தனது உரையில் மண்முனைப்பற்று பிரதே சபையின் செயலாளர் திருமதி.கா.ஜெ அருள்பிரகாசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top