ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கிற்கு ஆலையடிவேம்பு பிரதேச சபையே காரணம் என அக்கரைப்பற்று-07 கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் க.சரவணபவா குற்றம் சாட்டினார்.
முறையாக வடிகான்கள் பராமரிக்கப்படாமை மற்றும் அவர்களது பொறுப்பற்ற செயற்பாடே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழை வீழ்ச்சியால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தொடரும் அதிகரித்த மழை வீழ்ச்சியால் வீதிகளில் நீர் நிரம்பி காணப்படுவதுடன் குடியிருப்புக்களும், வயல் வெளிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
மேலும் நீர் வடிந்தோடும் பிரதான பகுதியான பனங்காட்டுப்பாலத்தின் கீழான பகுதியில் சல்வீனியா சூழ்ந்து காணப்படுவதால் நீர் வடியும் தன்மையும் குறைவடைந்துள்ளது.
வயல்வெளிகளில் நிரம்பி வழியும் வெள்ளத்தால் விவசாய செய்கையில் பாதிப்பு ஏற்படலாம்; என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
Post a Comment