ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இன்று இடம்பெறவுள்ள கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தற்போது வருந்துவதாகவும் இதனடிப்படையில் நாளை கூடும் அதியுயர் பீட கூட்டத்தில் 18வது திருத்தச் சட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை கூடவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.virakesari
Post a Comment