ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார்.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணியான பி.ராஜதுரை கடந்த பொதுத் தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றிற்குத் தெரிவானார்.
அதன்பின்னர் இ.தொ.கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டார். தற்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையுடனும் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment