(பொன்முடி)
கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் மார்கழி 4ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரை நடைபெறவிருக்கும் 3வது சர்வதேச ஆய்வாளர்கள் மாநாடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை (28) பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது.

2014ம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் 3வது சர்வதேச ஆய்வாளர்கள் மாநாடு தொடர்பான விளங்கங்களை பல்கலைக்கழக உபவேந்தர் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் சர்வதேச ஆய்வாளர்கள் மாநாட்டு இறுதி இரண்டு நாட்களுக்கும் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினர்.
இம்முறை நடைபெறவிருக்கும் ஆய்வாளர்கள் மாநாட்டிற்கு ஆறு பிரிவுகளில் விவசாய உணவு தொடர்பானது, பிரத்தியேக விஞ்ஞானம், காலநிலை மாற்றம் தொடர்பானது, மருத்துவ விஞ்ஞானம், மனித நலன் மற்றும் சமூக விஞ்ஞானம், வியாபாரமும் தொழில் முயற்சியாண்மையும், என்ற தலைப்பில் ஆய்வுகள் கோரப்பட்டு தெரிவு செய்யப்பட்ட, மிகவும் சிறந்த ஆய்வுகளுக்குரிய இறுதி நிகழ்வாகவே 4ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரை மிகவும் சிறப்பாக பல்கலைக்கழக நல்லையா அரங்களில் நடைபெறவிருப்பதாகவும் இம்முறை கடந்த 2வது ஆய்வாளர்கள் மாநாட்டை விட இம்முறை அதிகமாக வெளிநாட்டு உள்நாட்டு ஆய்வுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
நடைபெற்ற ஊடக சந்திப்பில் 3வது சர்வதேச ஆய்வாளர்கள் மாநாடு நிகழ்சித்திட்டக் குழு உபவேந்தர் உட்பட நிகழ்வை தலைமைதாங்கி நடாத்தும் நிகழ்ச்சி திட்டக்குழுவான இணை தவிசாளர்களான திரு.மு.ரவி அத்துடன் திரு.ரி.வபான் மற்றும் இணைச் செயலாளர் திரு.ஆர்.திவ்வியதர்சன், திரு.கிருஸ்ணமோகன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment