தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தேற்றாத்தீவு பொது நூலக எற்பாட்டில் 17.11.2014 (திங்கட்கிழமை) தேற்றாத்தீவு தெற்கு பல்தேவை கட்டட தொகுதியல் உள்ள மண்டபத்தில் பி.ப 03.30 மணியளவில் வாசகர் வட்டத்தின் தலைவர் பரமலிங்கம் தீபன் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு பிரமத அதிதியாக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேல், சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் , விசேட அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி யாகேஸ்வரி வசந்தகுமார், கௌரவ அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரபாளினி சுரேஸ் றொபட் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது தேற்றாத்தீவு பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் தேனூர் ஊற்று எனும் கையெழுத்து சஞ்சிகை வெளியீடப்பட்டதுடன். அதிதிகளின் விசேட உரையும்,கவிதை,கட்டுரை,பேச்சு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இறுதியாக தேற்றாத்தீவு பொது நூலக நூலகர் திருமதி. ரமணி ஜெயபாலன் நன்றி உரையும் இடம் பெற்றது.
Post a Comment