மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் புதிய தலைவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் செயலாளர் எஸ்.மாமாங்கராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைப்பின் போசகரான மட்டக்களப்பு மறை மாவட்ட பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையாவின் வழிகாட்டலில், சிவில் சமூக அமைப்பின் இரண்டாவது நிருவாக சபை கடந்த சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டது.
அமைப்பின் உப தலைவர்களாக முன்னாள் உதவி அரசாங்க அதிபர் சி,புண்ணியமூர்த்தி, முன்னாள் உதவித் தொழில் ஆணையாளர் பி.அருணகிரிநாதர், செயலாளராக முன்னாள் கண்காணிப்புக்குழு உறுப்பினராக இருந்த லயன் எம். சதாசிவம், உப செயலாளராக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜா, பொருளாளராக எச்.எம்.கலீல் ஹாஜியார், இணைப்பாளராக கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், ஆலோசகராக கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை ஜீ.ராஜேந்திரா, செயற்குழு உறுப்பினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி டாக்டர் கே.கருணாகரன், விவசாய பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.சுதர்சன், முன்னாள் முகாமைத்துவ பீடாதிபதி வி.கனகசிங்கம், முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை சுவாமிநாதன், கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் தொமிங்கு ஜோர்ச், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் எஸ்.ரி.ஒக்கஸ், கணக்காளர் பி.முத்துலிங்கம், சட்டத்தரணி உவைஸ், வர்த்தகர் மீராசாகிபு, எஸ்.சோமசுந்தரம், முன்னாள் விவசாயக் காப்புறுதிப் பணிப்பாளர் எம்.விநாயகமூர்த்தி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
Post a Comment