0
(அசுவத்தாமா)

அதிமேதகு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தையொட்டி “மரம் ஒன்றை நடுவோம் பசுமையான உலகினை காண்போம்” எனும் சிந்தனையின் கீழ் தேசிய மரநடுகை நிகழ்வானது நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

இதனடிப்படையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையிலும் மரநடுகை நிகழ்வு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திங்கட்கிழமை (17.11.2014) காலை 10.43 மணியளவில் பிரதேச சபை வளாகத்திலும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு சொந்தமான கதிரவெளி சுற்றுலா விடுதி வளாகத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார் , சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வாகரை பிரதேச சபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.

அதன்போது பயன் தரும், நிழல் மரவகைகளை சேர்ந்த 75 இற்கும் மேற்பட்ட கன்றுகள் நடப்பட்டன. மரநடுகை நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காண்க.







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top