0
(அசுவத்தாமா)

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாகரைப் பிரதேச சபைக்குட்பட்ட மாங்கேணி, வாகரை, கதிரவெளி ஆகிய பொது நூலகங்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதன் பிரதான நிகழ்வு வாகரைப் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் செயலாளர் சி.இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. கா.சித்திரவேல் கௌரவ அத்திகளாக வாகரைப் பிரதேச செயலாளர் இ.இராகுலநாயகி மற்றும் கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களும் சிறப்பு அதிதிகளாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உலக தரிசன நிறுவன முகாமையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது வழங்கப்பட்ட புத்தகங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் பொதுப்போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல்கள் மற்றும் பொதுவான புதிய பதிப்புக்களை உள்ளடக்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், இதனை மாணவர்கள், வாசகர்கள் நல்லமுறையில் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் வாகரைப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியடைவதற்கு ஓர் ஊன்றுகோலாக அமையும்.









Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top