இராமகிருஸ்ணமிசனின் மூத்த துறவியான சுவாமி நடராஜானாந்த ஜீ மஹராஜின் 111வது ஜனன தினத்தினை முன்னிட்டு அவர் பிறந்த காரைதீவு மண்ணில் கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஞாபகார்த்தமாக பல நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு நடைபெற்றது.
இதன் பிரதான நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக முன்றலிலுள்ள அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலையணிவித்தலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வினை காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு இ.கி.மிசன் மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன் பாடசாலைகளையும் கவனித்து முகாமையயாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903 நவம்பர் மாதம் 29ஆம் திகதி காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக அவதரித்தார்.
கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில் சித்திபெற்று ஆசிரியராக நீர்ப்பாசன பொறியியல்உதவியாளராக சேவையாற்றி இ.கி.மிசனில் 1935இல் இணைந்தார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நெருங்கிய தொடர்பையடுத்து நிர்வேதசைதன்யர் எனும் துறவறப்பெயருடன் துறவறம் புகுந்து சுவாமி அகண்டானந்தரை குருவாகக்கொண்டு சுவாமி நடராஜானந்தரானார்.
1967.03.18ஆம் திகதி அதிகாலை பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ண பரமஹம்சரின் திருவுருவப்படத்தை மார்பில் தாங்கியவண்ணம் இறைவனடி சேர்ந்தார்.
Post a Comment