0
Morrison
இந்தோனேஷியாவில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை அடைவதை மேலும் கடினமாக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை அகதி உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளார்கள்.

2014ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதிக்குப் பின்னர், இந்தோனேஷியாவிலுள்ள ஐநா அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் மீளக்குடியேறும் தகுதியை இழக்கிறார்கள் என்று ஸ்கொட் மொரிசன் இவ்வாரம் அறிவித்திருந்தார்.


இது உண்மையாக பாதுகாப்புத் தேவைப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களையும் பாதிக்குமென அவுஸ்திரேலிய அகதிகள் பேரவையின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் போவ்ல் பவெல் தெரிவித்தார். இந்த விவகாரத்திற்கும் படகுகளைத் தடுக்கும் கொள்கைக்கும் முடிச்சுப் போடுவது மனசாட்சியற்றதென அவர் குறிப்பிட்டார்.
‘உலகளாவிய ரீதியிலுள்ள அகதிகளின் நிலவரம் குறித்து அமைச்சர் புரிந்து வைத்திருப்பது கொஞ்சம் தான். மக்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்லக் கூடாது என்ற அவரது கருத்து, தாம் முதலில் புகலிடம் நாடுகளில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் கணிசமான அபாயத்தை முழுமையாக மறுதலிப்பதாகும்,’ என்று திரு.போவ்ல் பவெல் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது மனிதாபிமானத் திட்டத்தின் மீதான உள்ளக பரிசீலனை மேற்கொண்டு வருவதும் கரிசனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் ஐநா அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்ட உண்மையான அகதிகள் அவுஸ்திரேலியாவில் மீளக்குடியேறுவதற்காக விண்ணப்பிப்பதும் தடுக்கப்படும் என அகதி உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top