0
(கிருஷ்மன்)

3 கோடி ரூபா செலவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள 3 பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த (18) நடைபெற்றது.

மகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு எனும் கோட்பாட்டின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் வகையில் அமைகின்ற பாலங்களை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் அளிக்கம்பை பாலம், தோணிக்கல் மேல் கண்டப்பாலம் , தோணிக்கல் மேட்டாறு துரிசிப்பாலம் பாலங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக கணக்காளர் கே.கேசவன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா ,கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உ;த்தியோகத்தர் ஏ.தர்மதாச உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இதன் மூலம் சுமார் 60வருடங்களுக்கு மேல் விவசாயிகள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் இங்கு கருத்து வெளியிட்டனர்.







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top