(எமது நிருபர்)
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட தாமரைக்கேணி வீதியில் வடிகாண் இன்மையினால் மழை காலங்களில் வீதியில் வெள்ள நீர் தேங்கி நிற்க்கின்றமையினால் மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியில் இரண்டு பிரபல பாடசாலைகள் அமைந்திருப்பதனால் இவ்வீதியினால் நாளாந்தம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும் பல்வறு சிரமத்தின் மத்தியிலேயே பிரயாணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வீதியில் வங்கியும் அமைந்திருப்பதனால் வங்கி ஊழியர்கள், பொது மக்கலென பலரும் பிரயாணம் செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் கவனத்திற் கொண்டு வெகுவிரைவாக இவ் வீதியில் வடிகானினை அமைத்துத்து சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு இப்பகுதிவாழ் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
Post a Comment