0
(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் அருமைத்துரை தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் வித்தியாலயத்திற்கு கதிரைகள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண பை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), மட்டக்களப்பு கோட்டக் கல்வி அதிகாரி அ.சுகுமாரன், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகள் சிறப்பாக வரவேற்கப்பட்டு, சிறப்புரைகள் இடம்பெற்று கதிரைகள் உத்தியோக பூர்வமாக பாடசாலை அதிபரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top