சுவிஸ்லாந்து நாட்டை தளமாக கொண்டு இயங்கும் முனைப்பு நிறுவனம் முனைப்பின் அனர்த்த நேர உதவித்திட்டத்தின்கீழ் பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு 150 குடும்பங்களுக்கு தேவையான ஒரு தொகுதி அத்தியாவசிய உலர் உணவு மருந்துப்பொருட்களை இன்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கைகயளித்தனர்.
முனைப்பு அமைப்பின் சார்பில் செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் கு.அருணாசலம் ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் பா.இன்பராஜா ஆகியோர் பொருட்களை கையளித்தனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து இப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு வெள்ளிக்கிழமை முதல் பொது மக்கள் நலன் விரும்பிகளால் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரம், மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன, இந்தப் பொருள்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தைக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.
Post a Comment