(த.லோகதக்சன்)
பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கமும், தமிழ் வர்த்தகர்களும் இணைந்து வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்படைத்தனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கமும், தமிழ் வர்த்தகர்களும் இணைந்து மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வழங்குவதற்காக ஒரு இலட்சம் பெறுமதியான சாரம், துவாய், போர்வைகள், பெண்களுகான சோட்டிகள் குழந்தைகளுக்கான பிளாஸ்ரிக் பால் போத்தல்கள் போன்ற பொருட்களை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கத்தினர் மற்றும் தமிழ் வர்த்தகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment