0
(த.லோகதக்சன்)

வாகரை பிரதேச சபையினால் கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவும் வகையில் வாகரை பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்களினால் வாகரை பிரதேச மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 70,000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள்  கடந்த வெள்ளிக்கிழமை  மாலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் காசிப்பிள்ளை சித்திரவல் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பிரதேச சபையின் உத்தியோகத்தர்களினால் மக்களிடமிருந்தும் சேகரிக்கப்ட்ட அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பால்மா, மெழுகுவர்த்தி, நூடில்ஸ் மற்றும் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கான்  பொருட்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. சேகரிக்கப்ட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு பாதிக்கப்ட்ட மக்களுக்காக அனுப்பி வைக்கப்ட்டது

சுமார் 02 மணித்தியாலங்களுக்குள் மேற்படி பொருட்கள் சேகரிக்கப்பட்டதும், மக்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ததும் பாராட்டத் தக்கது.






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top