0
(சிமஷ்னு)

பதுளை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கபட்ட  மக்ககளுக்கான நிவாரண சேகரிப்புக்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா. சித்திரவேலின்  பணிப்பிட்கிணங்க  மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையினால் கடந்த இரு தினங்களாக சேகரிக்கபட்ட நிவாரண பொருட்கள் நேற்றையதினம் 01-11-2014 மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜா அவர்களிடம் மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் அவர்களினால் கையளிக்கபட்டது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளரினால்  ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிவாரண சேகரிப்பில்  பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் உழியர்களினால் அரையம்பதி மகா வித்தியாலய அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்ட இச் சேவைக்கு மண்முனைப்பற்று வர்த்தகர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை நல்கிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.










Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top