0
பதுளை மாவட்டம் கொஸ்லாந்தையிலுள்ள மீரியபெத்த தோட்டக்குடியிருப்பில் கடந்த புதன்கிழமை காலை நிகழ்ந்த மண்சரிவு அனர்த்தத்தினால் தமது லயன்கள், உடைமைகள், உறவுகளைப் பறிகொடுத்து இடம்பெயர்ந்து பூனாகலை தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் கடந்த சில நாட்களில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தேவையான அளவுக்கு வந்து சேர்ந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அவற்றைக் கிரமமாக விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு நிவாரணப் பொருட்கள் எவற்றையும் அனுப்பவேண்டாமெனப் பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நேற்றையதினம் colombogazette இணையத்தளம் தனது Twitter பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க அரசு 50,000 அமெரிக்க டொலர்களையும், இந்திய அரசு 5 மில்லியன் ரூபாய்களையும் உடனடி உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top