0
(த.லோகதக்சன்)

குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் எமது நாட்டின் ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டி எதிர்வரும் 18.11.2014ம் திகதி செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு  விஷேடபூசைவழிபாடு இடம்பெறவுள்ளது.

கும்புறுப்பிட்டி கண்ணகி அம்மன் ஆலய தலைவர் திரு.கே.மகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கௌரவ.சுசந்த புஞ்சிநிலமே அவர்களும், குச்சவெளி பிரதேச செயலாளர் திரு.மா.தயாபரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.என்.கோவிந்தராஜன், இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நே.பிருந்தாபன், கலாசார உத்தியோகத்தர் ஆர்.எம்.எஸ். பியசேகர, கும்புறுப்பிட்டி மெ.மி.த.க.பாடசாலை அதிபர் திரு.வி.ராஜேந்திரன், கும்புறுப்பிட்டி கனிஷ்ர வித்தியாலய அதிபர் திரு.எஸ்.விக்னேஸ்வரன், நாவற்சோலை கனிஷ்ர வித்தியாலய அதிபர் திரு.கே.அழகேஸ்வரன் மற்றும் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏனைய ஆலயங்கள், சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள், கிராமபொதுமக்கள் ஆகியொரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 இந்நிகழ்வில் மரநடுகை நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top