0
‘பசுமை நிறைந்த நாடு – வளமான எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான நாடளாவிய ரீதியான தயட்ட செவண தேசிய மரநடுகை வேலைத்திட்டத்திற்கமைய ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிழல் தரும் மரங்களை நடும் உத்தியோபூர்வ நிகழ்வு இன்று 15-11-2014, சனிக்கிழமை சுபநேரமான காலை 10.41 மணிக்கு இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி மரநடுகையை ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் நீண்டகாலப் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.









Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top