(த.லோகதக்சன்)
கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் வேண்டுகோளுக்கிணங்க இம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வரட்சி நிலவும் பிரதேசங்களில் குடிநீரை வினியோகிப்பதற்காக தண்ணீர் தாங்கிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.எம்.எம்இரியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும், இம்இய்யதுஷ்ஷபாபின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான எஸ்.எச்.எம்.அறபாத் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் தாங்கிகளை வழங்கி வைத்தனர்.
Post a Comment