0
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுநகர், பிரதான வீதியிலுள்ள தனது வீட்டில் பழுதடைந்த நிலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு கேற்றில் ஏறி விளையாடிய மூன்றரை வயதான லியோசித் என்ற சிறுவன், அது சரிந்து மேலே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

கடந்த (28) மாலை 4.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் தலையில் ஏற்பட்ட பாரிய காயத்தின் விளைவாக இரத்தம் பெருக்கெடுத்தநிலையில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுக் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மிகத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில் கடந்த (30)  ஆம் திகதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக  வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுவனின் இறுதிக்கிரிகைகள் நேற்றையதினம் இடம்பெற்றதுடன்,
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top