இப் போட்டி மாணவர்களுக்கிடையில் நீர் மற்றும் சூழல் தொடர்பில் எழும் பிரச்சனைகளை கருத்தில்க் கொள்ளச் செய்யும் வண்ணம் இடம்பெற்றது.
இதன்போது போட்யிக்குரிய விழிப்புணர்வு மற்றும் தகவல் என்பன வழங்கப்பட்டது. பாடசாலையில் கல்விபயிலும் தரம் 10 தொடக்கம் 12 வரையுள்ள பத்து பாடசலைகலைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள்
கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம் .சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் ,வைத்தியர் எஸ்.விவேகானந்தன், நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் எஸ்.மோகனராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்விற்கான பூரண அனுசரணையினை கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயமும், கல்லடி நீர்பாசன திணைக்களமும் வழங்கியிருந்தது.
கடந்தாண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மாணவன் கிஷோத் நவரெட்னரஜா தலைமையிலான மூன்றுபேர் கொண்ட குழுவினர் முதல் தடவையாக பங்குபற்றி தேசிய ரீதியில் 600 பாடசாலைகளுக்கிடையில் போட்டியிட்டு முதலிடத்தினை பெற்றுக்கொண்டு தாய்நாட்டிற்கும் , மட்டக்களப்பிற்கும் பெருமை சேர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment