ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,
இதன் போது பிரமுகர்கள் குடும்பிமலைப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலயங்களான மடுவடிப்பிள்ளையார் ஆலயம், குடும்பிமலை கண்ணகையம்மன் ஆலயம், வேங்கையடி முருகன் ஆலயம், மிராணகடவை (சின்னவடமுனை) பேச்சியம்மன் ஆலயம் போன்ற ஆலயங்களை சென்று பார்வையிட்டதுடன், இவ்வாலயங்களில் இருக்கும் குறைபாடுகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டனர்.
பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்களால் மேய்ச்சல் தரை பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை, நிவாரணத் திட்டங்கள் வழங்கப்படாமை, குளங்கள் புனரமைப்பு, சோளார் பிரச்சினை மற்றும் குடிநீர் குழாய் பிரச்சனைகள் போன்றவைகள் முக்கிய பிரச்சினைகளாக எடுத்துக் கூறப்பட்டது.
இப்பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கொள்வதாக பிரமுகர்கள் தெரிவித்ததுடன், இங்கு தெரிவிக்கப்பட்ட சோளர் பிரச்சினை குடிநீர் குழாய் பிரச்சனை தொடர்பில் அவ்விடத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாழைச்சேனை பிரதேச சபை செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோளர்களை பழுதுபார்ப்பதற்கான நிதியினை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், குளங்களை திருத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் மாவட்ட கமநல திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக உரையாடினார், அத்தோடு குடிநீர் குழாய் பிரச்சினை தொடர்பிலும் ஒக்ஸ்பாம் நிறுவனத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.
வாழைச்சேனை நிருபர்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பி மலைப் பிரதேசத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வியாழக்கிழமை சென்று மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அப்பிரதேச மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மதவிவகாரங்களுக்கான பொறுப்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் ஆகியோர் இம்மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு குடும்பிமலை, சின்னவடமுனை பிரதேசத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் பலருடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

Post a Comment