முப்பெரும் தேவிகளுக்காக எடுக்கப்படும் மிக உன்னத விழாவான நவராத்திரி விழா நாடெங்கிலும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நவராத்திரி விழாவும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் புற்றடி நாகதம்பிரான் ஆலயத்தின் அறநெறிப்பாடசாலை மாணவிகளின் நாட்டிய நிகழ்வும் நடைபெற்றன.
நவராத்திரியின் சிறப்புகள் தொடர்பில் சைவ நெறி மன்ற தலைவர் சித்தாந்த வித்தகர் சு.சிவப்பிரகாசம் அவர்களினால் சிறப்பு சொற்பொழிவும் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக்குருக்களினால் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டன.
இதன்போது வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் உட்பட பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மாவட்ட கணக்காளர் நேசராசா உட்பட திணைக்களங்களின் தலைவர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment