டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணப்பட்ட இடங்கள் சுற்றிவளைப்பு
அண்மையில் பெய்த அடை மழையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஒன்பது பொதுச்சுகாதார பிரிவுகளிலுமிருந்து 20 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார். புளியந்தீவு பொதுச்சுகாதார பிரிவில் அதிகூடியதாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபை பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் காணப்பட்ட காணிகள் மற்றும் வீடுகள் பல சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான இரு வெற்றுக் காணிகள் மற்றும் ஒரு வீடு என்பன மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று காலை சுவீகரிக்கப்பட்டன.
இந்த சுற்றிவளைப்புக்கள், மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த இடங்களின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாகவும் பல வருடங்களாக பராமரிப்பற்று இக்காணிகள் காணப்படுவதால் டெங்கு நுளம்புகள் பரவி வருவதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
Post a Comment