(இ.திரயன்)
உலகின் மிகவும் உயரமான மனிதர், மிகவும் குள்ளமான மனிதரை சந்தித்துள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசென் என்ற 8 அடி 9 அங்குலம் உயரமான மனிதர், நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பஹதூர் டாங்கி என்ற ஒரு அடி 9 அங்குலம் உயரமான மனிதரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு இலண்டனில் இடம்பெற்றது. வருடாந்த கின்னஸ் உலகக் கிண்ண தினத்தை முன்னிட்டு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
31 வயதுடைய விவசாயியான கொசென், லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்னால் 74 வயதான டாங்கியின் கையைக் குலுக்கியுள்ளார்.
புகைப்படத்திற்காக தாம் பெரும் சிரமப்பட்டு குனிய வேண்டியிருந்தாக கொசென் தெரிவித்தார்.
கோசென் கூறினார்: ‘அவர் குள்ளமாகவும், நான் உயரமாகவும் இருந்தபோதிலும், எமது வாழ்க்கை முழுவதிலும் நாம் ஒரே விதமான சவால்களை எதிர்கொண்டோம். சந்திராவின் கண்களை நோக்கியபோது, அவர் நல்லவர் என்பது தெரிகிறது.’
டாங்கி குறிப்பிட்டார்: ‘உலகின் மிகவும் உயரமான மனிதரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு முற்றிலும் மாறுபட்டவரை சந்திப்பதற்கு ஆர்வத்துடன் இருந்தேன்.’ எனவும் இருவரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment