மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர் பிரதேசத்தை சேர்ந்த சிறுவனொருவன் தீபாவளி தினத்தன்று வெற்று காணியொன்றில் மண்ணை அகழ்ந்து சுரங்க பாதை அமைத்து விளையாடிக்கொண்டிருந்த வேளை திடீரென இடிந்துவிழுந்த மண்ணிற்குள் அகப்பட்ட சிறுவன் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அன்றையதினமே அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் நேற்றையதினம் (01) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சம்பவதினத்தன்று மாலை 3.30 மணியளவில் புதையுண்ட குறித்த சிறுவனை 4.15 மணியளவில் சுமார் 45 நிமிடங்களின் பின்னரே மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தின் தரம் ஆறில் கல்விகற்றுவந்த பதினொரு வயதுடைய மனோகர் சஜீவன் என பொலிசார் தெரிவித்தனர்.
கழுத்து முறிந்த நிலையில் உணர்வற்ற நிலையிலேயே குறித்த சிறுவனை அனுமதித்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் மூலமாக அறியக்கிடைத்தது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment