0
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2015 புதிய ஆண்டினை வரவேற்கும் நிகழ்வு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றையதினம் (01.01.2015) இடம்பெற்றது . 

இந்நிகழ்வில் மாவட்ட செயலக அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டனர் . ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டத்துடன், அரசாங்க சேவையின் சத்தியம் மற்றும் உறுதி மொழிகளும்  வழங்கப்பட்டது .    

இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியாகிய இன்றைய தினம் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசானது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பினை உண்மையாக்கும் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை அடையாளப்படுத்துகின்றது . 

இன்று ஆரம்பமாகும் புத்தாண்டினுள் எதிர்கால சந்ததிக்காக தேசிய ஒற்றுமையினை உறுதிப்படுத்தி சமுதாய மற்றும்  பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்ததும் பொருட்டு ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் ஒரே கொடியின் கீழ் ஒரே நாடாக, ஒரே தேசமாக மலர்ச்சியடைகின்ற தாய் நாட்டை அபிவிருத்தி செய்யும் சவாலிற்கு முகம்கொடுக்கும் நோக்குடன்  வினைத்திறமையாகவும் பயன் மிக்கதாகவும் உச்ச அளவிலான அர்ப்பணிப்புடனும்,நேர்மையோடும் ,திடசங்கற்பத்துடனும் ,மக்களுக்குச் சார்பாகவும் அரச கொள்கைகள் மற்றும் நோக்கம் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு என்னிடம் அளிக்கப்படுகின்ற கடமைப் பொறுப்புக்களை சகல வழிகளிலும் நிறைவேற்றுவேன் என்று பொதுமக்களின் பணத்தில் சம்பளம் பெறும் அரசாங்க ஊழியரான நான் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன் என்ற சத்திய வாக்குறுதிகளுடன் புதிய ஆண்டினை வரவேற்கும் ஆண்டாக இந்நிகழ்வு நேற்றையதினம்  இடம்பெற்றது .













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top