0
(ஏறிக்)

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பெண் சாரணியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கிடையிலான  சித்திரப் போட்டியொன்று மட்டக்களப்பு  இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று முன்தினம்  (01)  நடைபெற்றது. 

இந்நிகழ்வானது  பெண் சாரணிய மாகாண ஆணையாளர் திருமதி. பிரியந்தி பெரேரா தலைமையில் நடைபெற்றதுடன் ,  இச்  சித்திரப் போட்டியின் தலைப்பானது “எயிட்ஸ் நோயினை ஒழிப்போம்" ஆரோக்கியமாக வாழ்வோம்” எனும் தொனிப்பொருளில் அமைந்திருந்தது. 

எயிட்ஸ்  பற்றிய  விழிப்புணர்வினை  எயிட்ஸ்  தடுப்பு  சுகாதார  பரிசோதகர்      ப. மனோகரன் நடாத்தினார். 

இப்போட்டி நிகழ்வில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், இப்போட்டிகளில் ஐந்து பாடசாலைகள் பங்குபற்றியிருந்ததுது. 

இறுதியில் புதிதாக இணைந்த இரு சாரணிய மாணவிகளுக்கு முதலாம் சின்னம் சூட்டப்பட்டது.  இவ்வாறாக இடம்பெற்ற சித்திரப் போட்டியானது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.  












Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top