கல்முனை தமிழ் பிரிவு விதாதா வள நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2014 க்கான தேசிய தொழிநுட்ப பரிமாற்ற புத்தாக்க நிகழ்ச்சியானது அண்மையில் கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி பிரியந்தி ஜெயந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதிகளாக கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் திரு க.லவநாதன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பல எண்ணிக்கையிலான வினைமுயலுனர்களும் கலந்து இதில் பயனடைந்தனர். அன்றையதினம் மெழுகுவர்த்தி உற்பத்தி, பாடசாலை பசை உற்பத்தி, சலவைத்தூள் உற்பத்தி, நறுமண வாசணை திரவ உற்பத்தி தொடர்பான பயிற்சிநெறிகள் பயிற்றுவிக்கப்பட்டன என்பது இதில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment