எபோலா ஆட்கொல்லி நோய் உலகின் ஏனைய பாகங்களுக்கும் பரவக்கூடிய தீவிர அச்சுறுத்தல் இன்னமும் நீடிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் போலா நோயைக் கட்டுப்படுத்துவதற்குரிய பணிக்குப் பொறுப்பான ரோனி பான்பரி (Tony Banbury) நோயின் தீவிரம் பற்றி பேசினார். அவர் ப்ரீ-ரவுணில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.
எபோலா நோயை கட்டுப்படுத்துவதற்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அந்த இலக்குகள் அடையப்பட்டுவிட்டனவா என்பதை பான்பரி உறுதி செய்ய மறுத்திருந்தார்.
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்தல், நோய்த்தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை பாதுகாப்பாக புதைத்தல் போன்றவை சார்ந்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்தார்.
Post a Comment