0
(HT) 

இன்று அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையான், ஹிஸ்புல்லா போன்ற தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்கள் இருப்புகளை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை திட்டித் தீர்த்துக் கொண்டுதான் அவர்கள் இந்த அரசாங்கத்தைக் குளுமைப்படுத்துகின்றனர். என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அண்மையில் பிள்ளையான் ஹிஸ்புல்லா போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி வெளியிட்ட விமர்சனங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் அரசியல் முறைமையில் தோற்றுவிக்கப்பட்டதே இந்த மாகாணசபை முறைமை அதிலே தான் இவர் முதலமைச்சராக சிறிது காலம் இருந்தார் அது மட்டுமல்லாது இவர் இருந்த காலத்தில் கூட இந்திய அரசாங்த்தால் கிழக்கு மாகாண மக்களுக்கென்று பல நன்மைகள் மேற்கொளளப்பட்டன ஆனால் அவை மக்களுக்கு சென்றடைந்தனவா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவரைத் தோற்கடிக்க வேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கும் இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இல்லை. இந்தியா மேலும் மேலும் எமது மக்களுக்காக பல நன்மைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றது.

நாங்கள் ஒருபோதும் பணத்தைக் கொண்டு அரசியல் செய்வதில்லை மக்களின் மனதை வென்றுதான் அரசியல் செய்கின்றோம். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை குறை கூறுகின்றவர்கள் மக்கள் மனதை வென்றிருந்தால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

அது போலவே அண்மையில் ஹிஸ்புலலா அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லீம் காங்கிரஸையும் இனவாத அரசியல் செய்யத் துண்டுகின்றது என்று கூறிருக்கின்றார், நான் நினைக்கின்றேன் அவர் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் போக்கு பற்றி அறியாதவராய் இருந்திருக்கின்றார் என்று.  ஏனெனில் நாம் ஒரு போதும் இனவாத அரசியல் செய்யவில்லை இனத்தின் உரிமைக்காகவே அரசியல் செய்கின்றோம். 

அதுமட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் சலுகைளுக்காக அரசியல் செய்யும் கட்சியல்ல எமது சந்ததிகளின் நன்மைக்காகவே இன்றுவரை அரசியல் மேற்கொள்கின்றோம். சலுகைகளுக்காக கொள்கைகளை மாற்றுகின்றவர்கள் அல்ல,  உரிமை இல்லாமல் கிடைக்கின்ற சலுகைகளை பெற்றுக் கொண்டு என்ன பயன் இருக்கப் போகின்றது.

இவர்கள் கூறுகின்றனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக என்ன செய்யப் போகின்றது என்று ஆம் எம்மால்  பாதை போட முடியாது அபிவிருத்தி செய்ய முடியாது தான், ஆனால் எமது மக்களின் உரிமைகளை கேட்டு போராட முடியும். 

ஆனால் அது அவர்களால் முடியாது ஏனெனில் இந்த அரசாங்கத்தை எதிர்த்து அவர்களால் ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினை குறை கூறுவதற்கு அருகதையற்றவர்களே இவர்கள் என்று தெரிவித்தார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top