0
(பொன்முடி & மயூரன்)

வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த காவலாளி ஒருவர், தனது வேலையை நிரந்தரமாக்குமாறு  கோரி பாடசாலை மாடியில் ஏறி இன்று  செவ்வாய்க்கிழமை (02) மாலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

இது பற்றித் தெரியவருவதாவது, 

வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில்  கடந்த 12 வருடங்களாக  28 வயதான சிவலிங்கம் சசிதரன் என்பவர் இரவு பகலாக இப்பாடசாலையில் தற்காலிக கவலாளியாக கடமையாற்றியிருந்த நிலையில் மாகாண அமைச்சினால் வழங்கப்பட்ட நிரந்தர காவலாளி நியமயனத்தின்போது இரண்டு கவலாளிகள் புதிதாக நியமனம் பெற்று வந்துள்ளமை தெரியவருகின்றது.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தரக் காவலாளிகள் மற்றும் சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், தனது  வேலையை  நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகளை இவர்  மேற்கொண்டார். இருப்பினும்,  அது கை கூடவில்லை என்பதால்,  தனது தற்காலிக வேலையை நிரந்தரமாக்கித்தருமாறுகோரியே இவர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டார்.

இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார்  சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உரிய நபரிடம் பொலிசார் ஆர்ப்பட்டத்தை விட்டு இறங்குமாறு கோரிக்கை விடுத்தும் நிபந்தனைக்கு உடன்படாத கவலாளி பாடசாலையின் மாடிக்கூரையின் உட்கார்ந்துகொண்டிருந்தார். இதேவேளை பாடசாலையின் மாடியில் ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த குறித்த நபரை பார்ப்பதற்காக வீதிகளில் பொதுமக்கள் கூடி நின்றதை காணக்கூடியதாகயிருந்தது. 

இதேவேளை வந்தாறுமூலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி காரியலய தலைவர் வே.நந்தன் மற்றும் கட்சி காரியாலய உறுப்பினர்களும் அவ்விடத்திற்கு வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபரிடம் அலைபேசியுடாக கதைத்ததும் குறித்த நபரின் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையடுத்து ஆர்ப்பட்டத்தை கைவிட்டு மாடியில் இருந்து இறங்கிவந்தார். குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேம திலக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சம்பவமொன்று கடந்த மாதம் 18ம் திகதி சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்திலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top