மட்டக்களப்பு, கொக்குவில் வராந்தச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத பொருட்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று (01) கைப்பற்றப்பட்டு அகற்றப்பட்டன.
பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள், கருவாடு, சிற்றூண்டி வகைகள் என்பன கைப்பற்றப்பட்டு அகற்றப்பட்டன.
வராந்த சந்தைகளில் இவ்வாறன பொருட்கள் விற்பனை செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. போது சுகாதாரப் பரிசோதகர்களால் இவ்வாறான நடவடிக்கை மேட்கொள்ளப்படுவது மக்களை சுகாதார ரீதியாக பாதுகாக்கும் செயடற்பாடாகும் என நுகர்வோர் தெரிவித்தனர்.
எல்லா இடங்களிலும் இவ்வாறான செயற்பாடு இடம்பெற வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.
Post a Comment