0
கிழக்கு மாகான சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலின, கிழக்கு மாகாண சபையின் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட் மற்றும் உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவிக்கையில்,   

தனது பாதுகாப்புக்கு இரண்டு பொலிஸார் வழங்கப்பட்டிருந்தனர்.  இந்த நிலையில், தனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முடிவுக்கு கட்டுப்பட்டு, பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவை ஆதரித்து தேர்;தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தனது பாதுகப்புக்கு வழங்கப்பட்டிருந்த  இரண்டு பொலிஸாரையும் விலக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  தனது பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  பலத்த சந்தேகத்தை தனக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏ.எம்.ஜெமீலின் கருத்து

எனக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து வகையான பாதுகாப்பும் அரசாங்கத்தினால் இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இவரது மெய்ப்பாதுகாவலர்களாக செயற்பட்ட ஐந்து பொலிசாரும் பொலிஸ் நிலையங்களுக்கு இன்று திருப்பியழைக்கப்பட்டுள்ளதுடன் இவரது வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகான சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் என்ற ரீதியில் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற 2 பொலிஸாருக்கு மேலதிகமாக ஜெமீலுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது மேலதிக பாதுகாப்பு மட்டுமல்லாமல் மாகாண சபை உறுப்பினருக்கான குறைந்தபட்ச பொலிஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை தொடக்கம் அவருக்கான அமைச்சரவை பாதுக்காப்பு பிரிவினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

பிரத்தியேக செயலர் கருத்து

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட் இற்கு வழங்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களும் மூன்று பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் புதன்கிழமை இரவு முதல் மீளப் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.ஏ.எம். சரூஜ் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைரின் மெய்ப் பாதுகாவலர்கள் மூவரும் நேற்றிரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top