(எரிக்)
சுகாதார வாரத்தை முன்னிட்டு கோட்டைமுனை பற் சிகிச்சை வைத்தியசாலையினான் அண்மையில் மாணவர்களுக்காண பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது குறித்த வைத்தியசாலையின் பற் சிகிச்சையாளர் திருமதி. ச. உதயகுமார் மற்றும் சுகாதார உதவியாளர் திருமதி.த. சுதர்சன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தரம் 06 – 10 வரையான மாணவர்களுக்கு பற்களில் ஏற்படும் நோய்கள், அந்நோய்கள் வராமல் தடுப்பது எப்படி போன்ற விளக்கங்கள் அழிக்கப்பட்டது.
அத்தோடு அதற்கான செய்முறைகளும் செய்து காண்பிக்கப்பட்டது. அத்துடன் ஒரு சில மாணவர்களின் செயல்முறைகளை செய்து காண்பிக்குமாறு கேட்கப்பட்டதுடன் அதற்கான விளக்கப்படங்களும் காண்பிக்கப்பட்டது.
Post a Comment