0
மட்டக்களப்பு புளியந்தீவு பகுதியில் மிகவும் பிரசித்தமான பாலர் பாடசாலையாகத் திகழும் மோனிங் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வும், மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும் சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி.புஸ்பராணி லோகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜெறோன் டி லிமா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானங்கள் பராமரிப்பு பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் கருணாகரன் ஆகியோரும், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சின்னஞ் சிறார்களினால் சிறப்பான கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கு சிறப்பு பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் தரம் ஒன்றிற்காக பாலர் பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களுக்கு பிரியா விடை வழங்கும் நிகழ்வு பிரதம ஆசிரியையினால் நிகழ்த்தப்பட்டது.

பிரியாவிடை பெற்று செல்லும் மாணவர்களால் பாலர் பாடசாலையின் ஆசிரியைகளும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

























Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top