(கே.எல்.ரி.யுதாஜித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான சின்னவத்தை சிறி பந்தனா ராமய விகாரையில் நன சலன கணணிக் கல்விக் கூடத்தினை தொலைத் தொடர்புகள் தொழில்நுட்பப்பிரதி அமைச்சர் பிரபா கணேசன் நேற்றைய தினம் (06) புதன்கிழமை திறந்து வைத்தார்.
போரதீவ பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிங்கள மக்கள் வாழும் இக் கிராமத்தில் நடைபெற்ற இந்த நனசல கணணிக் கூட திறப்பு விழாவில், பட்டிருப்புத் தொகுதி சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இ.ராஜமாணிக்கம், பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், தொலைத் தொடர்புகள் தொழில்நுட்பப்பிரதி அமைச்சின் உதவிச் செயலாளர் எஸ்.டி.எஸ்.சிறிபதி, இணைப்புச் செயலாளர் டாக்டர் சுரேஸ் கங்காதரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சின்னவத்தை சிறி பந்தனா ராமய விகாராதிபதி வண.குசலானந்த தேரரின் ஆசியுரையுடன் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ஜனாதிபதியின் நகரங்களைப் போன்று கிராமங்களிலும் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த நனசல கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனைச் சிறந்த முறையில் பயன்படுத்தி கிராம மக்கள் அனைவரும், பாடசாலை மாணவர்களும் தம் அறிவுத்திறன்களை விருத்தி செய்து கொள்ளவேண்டும். அத்துடன், எதிர்வரும் காலங்களில் மேலும் பல தேவைகளையும் நிறைவேற்றி வைக்க ஆவன செய்வேன் என்றும் தெரிவித்தார்.
Post a Comment