0
நாவற்குடா பிரதேசத்தை மையம்படுத்தி  அமைக்கப்பட்ட இக் கல்வி மேம்பாட்டு மையமானது நாவற்குடா பிரதசத்தில் கல்விகற்கும் மாணவர்களின் திறமையினை இனங்கண்டு அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற நோக்கோடு மாணவர் பாராட்டு விழா ஒன்றினை நேற்றைய தினம் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.                            


இந்தமையத்தில் அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்விமான்கள் ஒன்றுசேர்ந்து இந்த மேம்பாட்டு மையத்தை உருவாக்கி பல மாணவர்களுக்கு கல்வித்திட்டங்களை உருவாக்கிவருகின்றனர். 

எதிர்கால கல்விக்கு அவர்கள் முகம்கொடுக்க முடியாதவர்களாயின் அவர்களுக்கான வசதியினை இவ்மேம்பாட்டு மையத்தினூடாக ஏற்படுத்திக்கொடுக்கமுடியுமென குறிப்பிடப்பட்டது. இதன் முதற்கட்டமாக மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (06) நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.       

இந்நிகழ்வில் அதிதியாகவும்ஆசியுரை வழங்குவதற்காகவும் திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் ஆலய ஆன்மீக குரு வேதாந்தா ஆனந்தா  சுவாமி ஜீ அவர்களும்,   நாவற்குடா லூர்த்து அன்னை ஆலய பங்குத்தந்தை எக்ஸ்.அய்.ரஜீவன் அடிகளாரும். ஆசியுரை வழங்கி மாணவர்களையும் கெளரவித்தனர்.

ஐந்தாம் தரம் கா.பொ.த.சாதாரணதரம், ,உயர்தரம் போன்ற பிரிவுகளில்   திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

























Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top