0
(மன்மதன்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர் பகுதியில் (06) வியாழக்கிழமை பூரணை தினத்தன்று வீடொன்றில் பதுக்கி வைத்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வெதஹெதரவின் ஆலோசனைக்கு அமைவாக, பொலிஸ் உப பரிசோதகர் திலகசிறி தலைமையிலான குழுவினரும் கிராம உத்தியோகத்தர் ரி.சிவலிங்கம் ஆகியோர் இணைந்து அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். 

இதன்போது விற்பனையில் ஈடுபட்ட எஸ்.ஞானசந்திரன் என்பவரை பொலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து பத்து (10) 750 மில்லிலீற்றர் மற்றும் எண்பத்தொன்று (81) 180 மில்லிலீற்றர் அடங்கலாக 22,080 மில்லிலீற்றர் கள்ளச்சாராய போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top