புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் இருந்து இலங்கை வந்த மூன்று பிரதிநிதிகள் இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அகியோர் அடங்கிய அரசாங்க குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆயர் சுவாம்பிள்ளை பிபிசியிடம் கூறினார்.
உண்மையில் பாப்பரசரின் விஜத்தில் இலங்கை அரசாங்க தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை இந்த சந்திப்பின் போது தாம் உணரக் கூடியதாக இருந்ததாக கூறிய ஆயர், அந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜனவரி மாத முதல் வாரத்தில் இங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் என்ற வகையில் செய்திகள் வரும் நிலையில், அப்படியாக நடந்தால் திருச்சபைக்கு அதில் ஆட்சேபம் ஏதும் கிடையாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை அவர்கள், தேர்தல் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லையாயினும், எந்த சூழ்நிலையிலும் பாப்பரசரின் விஜயத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்க தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
Post a Comment