கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருதரப்பு மாணவர்களுக்கிடையே நேற்றையதினம் (04) ஏற்பட்ட முறுகல்நிலை நிலை காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டு உடனடியாக பதற்றத்தினை தவிர்க்கும்வண்ணம் பொலிசார் வரவழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பல்கலைக்கழகத்தில் நேற்றைக்கு முன்தினம் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாற்றம் பெற்றதனாலேயே நேற்றைய தினம் இவ்விருதரப்பு மாணவர்களுக்கிடையே மோதல் நிலை ஏற்பட்டிருந்தது.
இதன் போது விஞ்ஞான பீட மாணவர்கள் நால்வரும் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் நால்வரும் பலத்த காயங்களுக்குள்ளாகி செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சுமூக நிலை வழமைக்கு திரும்பும்வரை குறித்த இரண்டு பீடங்களுக்கான மாணவர்களுக்கான பல்கலைக்கழக கற்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமது கற்கைநெறிகளை ஆரம்பிப்பதற்காக வருகைதருமாரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் வருகையினைத் தொடர்ந்து, பதற்ற நிலை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment