0
மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு வெள்ளிக்கிழமை முதல் பொது மக்கள், நலன் விரும்பிகளால் பொருள்கள் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்எம்.சார்ள்ஸிடம் கைகயளிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம், மாவட்டததிலுள்ள பிரதேச செயலகங்களிலும் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது முதல் பொது மக்களும் நலன் விரும்பிகளும் உணவுப் பொருள்களையும், புதிய ஆடைகள், மற்றும் தேவையான பொருள்களையும் வழங்கி வருகின்றனர். அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக   கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினர் ஐம்பதாயிரம் ரூபா பணத் தொகையினர் வழங்கினர்.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக   கைத்தொழில் சம்மேளனத்தினால் ரூபா ஒரு லட்சம் பெறுமதியான பொருள்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் ஒரு லட்சம் ரூபா பணம், இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன் புரி சங்கத்தினால் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் என்பனவும் கையளக்கப்பட்டன.

மட்டக்களப்புக் கல்லடியிலுள்ள விழிப்புரனற்றோர் தரிசனம் நிறுவனத்தினால் பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு உதவும் முகமாக ஒரு தொகை நிவாரணப்பொருட்களின் கையளிப்பு நிகழ்வொன்று 01.11.2014 அன்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

அதே நேரம், பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களில் தாய், தந்தையினரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்கு சுபீட்சம் அளிக்கவும், பங்களிக்கவும் கருதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தினால் இக்குறித்த பிள்ளைகளுக்கான வங்கிச் சேமிப்புக் கணக்குகள் ஆரம்பித்து வழங்கப்படவிருக்கின்றது.

இந் நல்முயற்சியில் நீங்களும் பங்குதாரர்களாகி உங்கள் நற்கரத்தின் பங்களிப்புகளையும் அத்தகைய பிள்ளைகளுக்கு வழங்கிவைத்த நல்லிதயங்களாக எம்முடன் ஒன்றிணைய உங்களையும் பெருமையுடன் அழைக்கின்றோம். இப்பிள்ளைகளுக்காக எம்மால் வழங்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளின் இலக்கங்கள் மற்றும் வங்கிகளின் விபரங்கள் அடங்கலாக எமது மாவட்ட உத்தியோகபூர்வ வலைப்பின்னலில் வெகுவிரையில் வெளியிடப்படும் என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம் என்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.










Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top