(த.லோகதக்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது ஜனாதிபதித்தேர்தல் காரியாலயம் வாழைச்சேனை ஹைராத் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாக் கிளையின் தலைவர் எஸ்.எம்.றம்ளார் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் கலந்து கொண்டார்.
அத்துடன், ஓட்டமாவடிப் பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் ஏ.எல்.நௌபர், வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகே, வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.ஏ.என்.பி.திப்புட்டுமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கிராம அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கட்சியின் நுற்றுக்கணக்கான ஆண் பெண் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment